இந்தியா

பஞ்சாபில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் உயிரிழப்பு

22nd May 2022 09:27 PM

ADVERTISEMENT

பஞ்சாபில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 6 வயது சிறுவன் 9 மணிநேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டான். 

பஞ்சாப் மாநிலம், ஷோஷியார்பூர் அருகே கியாலா கிராமத்தில் உள்ள வயலில் விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுவனை சில தெருநாய்கள் இன்று துரத்தியுள்ளன. உடனே அந்த சிறுவன் நாய்களிடமிருந்து தப்பிக்க ஓடியுள்ளான். அப்போது சிறுவன் எதிர்பாராத விதமாக சணல் பையால் மூடப்பட்டிருந்த 300 அடி ஆழ்துறை கிணற்றில் விழுந்துள்ளான். 

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், அதிகாரிகள் சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். முதற்கட்டமாக சிறுவனுக்கு ஆக்சிஜன் அளிக்கப்பட்டது. மேலும் அவசர சேவைக்காக மருத்துவக் குழுக்களும் தயார் நிலையில் இருந்தனர். 9 மணிநேர போராட்டத்திற்கு பின் சிறுவன் சுயநினைவின்றி மீட்கப்பட்டான்.

இதையும் படிக்க- மதுக்கடைகளை மூடுவது எப்போது? - அன்புமணி கேள்வி

ADVERTISEMENT

உடனடியாக சிறுவைனை ஹோஷியார்பூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும், சிறுவன் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே சிறுவனின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்த பஞ்சாப் முதல்வர், சிறுவன் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT