இந்தியா

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் உடன் அகிலேஷ் யாதவ் சந்திப்பு

21st May 2022 04:25 PM

ADVERTISEMENT

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ்வை சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் சனிக்கிழமை சந்தித்து பேசினார்.

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தில்லிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பொருளாதார நிபுணர்கள் மற்றும் மறைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினரை சந்திக்க உள்ளார். தொடர்ந்து அவர் நாளை சண்டிகர் பயணம் மேற்கொள்கிறார்.

இதையும் படிக்க | ஆசிரம பள்ளி மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்க வேண்டும்: அஜித் பவார்

இந்நிலையில் தில்லி சென்றுள்ள சந்திரசேகர் ராவ்வை சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ்வை சனிக்கிழமை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது நாட்டின் பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT