இந்தியா

5 ரூபாய்க்கு உணவு: தெலங்கானா அரசின் திட்டம்

12th May 2022 06:17 PM

ADVERTISEMENT


ஹைதராபாத்: ஹைதராபாத்தில் உள்ள 18 அரசு மருத்துவமனைகளில், உள் நோயாளிகளுடன் இருக்கும் உறவினர்களுக்கு 5 ரூபாய்க்கு உணவளிக்கும் திட்டத்தை தெலங்கானா அரசு அறிவித்துள்ளது.

ஹரே ராமா ஹரே கிருஷ்ணா அமைப்புடன், மாநில அரசு இணைந்து, மருத்துவமனையில் நோயாளிகளுடன் தங்கியிருப்பவர்களுக்கு தினமும் மூன்று வேளையும் 5 ரூபாய்க்கு உணவளிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. 

ஒசமானியா பொது மருத்துவமனையில் இன்று மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ஹரீஷ் ராவ் மற்றும் உள்துறை அமைச்சர் மெஹமூத்அலி ஆகியோர் இணைந்து இத்திட்டத்தைத் தொடக்கி வைத்தனர்.

லாப நோக்கமற்ற அமைப்புடன் இணைந்து இந்த திட்டத்தை மாநில அரசு செயல்படுத்துகிறது. இந்த திட்டத்தில், ஒரு உணவுக்கு ரூ.21-ஐ மானியமாக மாநில அரசு ஹரே ராமா ஹரே கிருஷ்ணா அமைப்புக்கு வழங்கும் என்றும் நாள்தோறும் சுமார் 20 ஆயிரம் பேர் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறுவார்கள் என்று கணிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
 

ADVERTISEMENT

Tags : telangana
ADVERTISEMENT
ADVERTISEMENT