இந்தியா

ராஜஸ்தான் பில்வாராவில் இணைய சேவைகள் மீண்டும் தொடக்கம்

12th May 2022 12:53 PM

ADVERTISEMENT

 

ராஜஸ்தானில் பில்வாராவில் பதற்றம் தணிந்த நிலையில், இணைய சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட நீதிபதி தெரிவித்தார். 

இதுதொடர்பாக மாவட்ட நீதிபதி கூறுகையில், 

பில்வாராவின் கோட்வாலி காவல் நிலையப் பகுதியில் நடைபெற்ற வன்முறையில் 22 வயது இளைஞர் உயிரிழந்ததைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் அதிகரித்தது. இதையடுத்து அங்கு இணைய சேவைகள் நிறுத்தப்பட்டன. 

ADVERTISEMENT

பில்வாராவில் நிலைமை அமைதியாக இருப்பதால் இணைய சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வதந்திகளுக்கு செவிசாய்க்க வேண்டாம் என்று பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

முன்னதாக, ராஜஸ்தானின் ஹனுமன்கர் மாவட்டத்தின் நோஹர் நகரில் இரதருப்பினர் மோதலைத் தொடர்ந்து விஷ்வ ஹிந்து பரிஷத் தொகுதித் தலைவர் சத்வீர் சஹாரன் காயமடைந்ததை அடுத்து பதற்றம் அதிகரித்தது.

இதனால், மாவட்ட நிர்வாகம் நோஹர் மற்றும் ஹனுமன்கர் மாவட்டத்தில் உள்ள மற்ற இரண்டு நகரங்களிலும் இணைய சேவைகளை நிறுத்தி வைத்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த இரண்டு மாதங்களாக பல்வேறு வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன என்றார் அவர். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT