இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் சொத்துகளை வாங்கியிருக்கும் 34 வெளிமாநிலத்தவர்

29th Mar 2022 04:34 PM

ADVERTISEMENT

 

புது தில்லி: சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் 370 ரத்து செய்யப்பட்ட பிறகு ஜம்மு-காஷ்மீரில் வெளிமாநிலத்தைச் சேர்ந்த 34 பேர் சொத்துகளை வாங்கியிருப்பதாக மத்திய அரசு மக்களவையில் தெரிவித்துள்ளது.

மக்களவையில் இன்று பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர் ஹஜி ஃபஸ்லுர் ரெஹ்மான் எழுப்பிய கேள்விக்கு, மத்திய உள் விவகாரத் துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் அளித்த பதிலில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த பதிலில், ஜம்மு, உதம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சொத்துகளை வாங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT