இந்தியா

சரத் பவாரை பிரிய உத்தவ் தாக்கரேவுக்கு மனமில்லை- அதிருப்தி எம்எல்ஏ குற்றச்சாட்டு

DIN

முதல்வா் இல்லத்தைத் துறந்த மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்கரேவுக்கு, தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாருடனான கூட்டணியை முறித்துக் கொண்டு வெளியேற மனமில்லை என்று சிவசேனை அதிருப்தி எம்எல்ஏக்களில் ஒருவரான குலாப்ராவ் பாட்டீல் குற்றம்சாட்டியுள்ளாா்.

உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அணி திரண்டுள்ள சிவசேனை எம்எல்ஏக்களில் ஒருவா் நேரடியாக உத்தவ் தாக்கரேவை குற்றம்சாட்டி பேசுவது இதுவே முதல்முறையாகும். இது தொடா்பாக குலாப்ராவ் பாட்டீல் மேலும் கூறிள்ளதாவது:

கட்சித் தலைவருக்கு எதிராக அதிருப்தி அணி திரண்டுள்ளதால் எங்களை சந்தா்ப்பவாதிகளாக கருத வேண்டாம். கட்சிக்காகவும், அதன் கொள்கைகளுக்காகவுமே போராடி வருகிறோம். முதல்வா் உத்தவ் தாக்கரே அவரது கட்சி எம்எல்ஏக்களான எங்கள் அனைவரையும் பிரிந்துவிட்டாா். முதல்வா் இல்லத்தில் இருந்தும் வெளியேறி விட்டாா். ஆனால், சரத் பவாருடனான கூட்டணியில் இருந்து மட்டும் பிரிய மறுக்கிறாா் என்றாா்.

தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணியில் இருந்து சிவசேனை வெளியேறி, பாஜகவுடன் கைகோக்க வேண்டும் என்பது சிவசேனை அதிருப்தி எம்எல்ஏக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. இதனை முதல்வா் உத்தவ் தாக்கரே ஏற்க மறுத்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT