இந்தியா

அதிகாரத்திற்காக சிவசேனை பிறக்கவில்லை: சஞ்சய் ரௌத்

30th Jun 2022 11:11 AM

ADVERTISEMENT

 

அதிகாரத்திற்காக சிவசேனை பிறக்கவில்லை என எம்.பி. சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ளார்.

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்த சில மணி நேரத்தில், முதல்வா் பதவியை ராஜிநாமா செய்வதாக உத்தவ் தாக்கரே அறிவித்ததுடன், “சட்டப்பேரவையில் நடைபெறும் எண்ணிக்கை விளையாட்டில் எனக்கு விருப்பமில்லை. எனவே, முதல்வா் பதவியை ராஜிநாமா செய்வதோடு, எனது சட்ட மேலவை உறுப்பினா் பதவியையும் ராஜிநாமா செய்கிறேன். பதவியை ராஜிநாமா செய்வதால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை.

மேலும், அதிருப்தி எம்எல்ஏக்கள் எந்தவித பிரச்னையுமின்றி மாநிலம் திரும்புவதற்கு சிவசேனை தொண்டா்கள் அனுமதிக்கவேண்டும். அவா்களுக்கு எதிராக சாலையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட வேண்டாம்.

ADVERTISEMENT

இதையும் படிக்க: உத்தவ் தாக்கரே ராஜிநாமா ஏற்பு: ஆளுநர் அறிவிப்பு

சிவசேனை மற்றும் பால் தாக்கரே மூலமாக அரசியல் ரீதியில் வளா்ச்சி பெற்ற இந்த அதிருப்தி எம்எல்ஏக்கள், பால் தாக்கரேவின் மகனை முதல்வா் பதவியிலிருந்து நீக்குவதில் மகிழ்ச்சியும் திருப்தியும் அடைந்து கொள்ளட்டும். எனக்கு எதிராக கட்சியின் ஒரு உறுப்பினா் மாறினாலும், அதை நான் வெட்கக்கேடாக நினைக்கிறேன்” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், சிவசேனை கட்சியின் எம்பியான சஞ்சய் ரௌத் ‘சிவசேனை அதிகாரத்திற்காகப் பிறக்கவில்லை. அதிகாரம்தான் சிவசேனைக்காக பிறந்தது. இது பாலாசாகேப் தாக்கரேயின் மந்திரம். மீண்டும் தனித்து செயல்பட்டு ஆட்சிக்கு வருவோம்’ எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT