இந்தியா

மும்பையில் அதிர்ச்சி: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி, கொலையா, தற்கொலையா?

30th Jun 2022 04:05 PM

ADVERTISEMENT

 

பயன்பாடற்ற மருத்துவமனை கட்டடத்தில் இருந்து 4 சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் மும்பையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கண்டிவாலி மேற்கு புறநகரில் பயன்பாடற்ற நிலையிலிருந்த மருத்துவமனை கட்டடத்தில் வசித்து வந்தவர்கள் உயிரிழந்து கிடப்பதாக போலீசாருக்கு நேற்றிரவு தகவல் கிடைத்தது. 

இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்றனர். அங்கு 2-வது தளத்தில் இரண்டு பெண்களின் சடலங்கள் ரத்த வெள்ளத்தில் காயங்களுடன் காணப்பட்ட நிலையில், மேலும் இருவர் முதல் தளத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டனர். பலினாவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

இதையும் படிக்கலாம்: மகாராஷ்டிர முதல்வராக இன்று மாலை பதவியேற்கிறார் ஃபட்னவீஸ்?

சம்பவ இடத்திலிருந்து நான்கு பேரின் உடல்களை மீட்டு, கண்டிவலி போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து, சடலங்களை அருகிலுள்ள பிஎம்சி சதாப்தி மருத்துவமனைக்கு மாற்றியுள்ளனர்.

இறந்தவர்கள் ஷிவ்தயாள் சென், கிரண் தல்வி, பூமி தல்வி மற்றும் முஸ்கன் தல்வி என அடையாளம் காணப்பட்டுள்ளனர், மேலும் இரட்டைக் கொலை மற்றும் இரட்டை தற்கொலைக்கான காரணங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT