இந்தியா

’நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்வோம்’: ஏக்நாத் ஷிண்டே

29th Jun 2022 06:26 PM

ADVERTISEMENT

 

தன் ஆதரவு எம்எல்ஏக்களுடன் நாளை (ஜூன் 30) மும்பை வருவதாக ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். 

ஏக்நாத் ஷிண்டே தன் ஆதரவு எம்எல்ஏக்களுடன் அசாம் மாநிலம் குவாஹாட்டியிலுள்ள ரேடிசன் புளூ விடுதியில் முகாமிட்டிருந்த நிலையில் தற்போது அங்கிருந்து கிளம்பி  அவர்களுடன் குவாஹாட்டி விமான நிலையம் வந்துள்ளார்.

இதையும் படிக்க: பெரும்பான்மை கிடைக்குமா? உத்தவ் தாக்கரே தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்

ADVERTISEMENT

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஷிண்டே “ நாங்கள் நாளை மும்பை வந்து சட்டப்பேரவையில் நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்வோம். நாங்கள் சிவசேனையினர். கிளர்ச்சியாளர்கள் அல்ல.  பாலாசாகேப் தாக்கரேவின் சித்தாந்தத்தை  முன்னெடுத்துச் செல்கிறோம். மேலும், இந்துத்துவா சித்தாந்தம் மற்றும் மாநிலத்தின் வளர்ச்சிக்காக பாடுபடுவோம்” எனத் தெரிவித்துள்ளார். 

மேலும், தற்போது மகாராஷ்டிரத்தில் உத்தவ் தாக்கரே தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

ஏக்நாத் ஷிண்டேவுக்கு 52 எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT