இந்தியா

அமர்நாத் பயணிகளுக்கு உண்மையான பாதுகாப்பு காஷ்மீர் மக்கள்தான்: மெஹபூபா முஃப்தி 

29th Jun 2022 04:54 PM

ADVERTISEMENT

 

கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் இருந்தாலும், அமர்நாத் யாத்ரீகர்ளுக்கு உண்மையான பாதுகாப்பு உணர்வை வழங்குவது காஷ்மீர் மக்கள் தான் என்று ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெஹபூபா முஃப்தி தெரிவித்தார். 

கரோனா தொற்று காரணமாக கடந்த 2 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வருடாந்திர அமர்நாத் யாத்திரை நாளை தொடங்குகிறது. 

காஷ்மீரிகள் எப்போதும் போல் அமர்நாத் பயணிகளை முழு மனதுடன் வரவேற்பார்கள் என்று நான் நம்புகிறேன். 

ADVERTISEMENT

இதையும் படிக்கலாம்: ஆகஸ்ட் 6ஆம் தேதி குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

யாத்திரை செல்லும் வழியில் கடைகளை மூடுவது உள்ளிட்ட கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் இருந்தபோதிலும், பயணிகளுக்கு உண்மையான பாதுகாப்பு உணர்வை வழங்குவது காஷ்மீரிகளாகிய நாங்கள்தான் என்று மெஹபூபா தனது சுட்டுரையில் பதிவிட்டுள்ளார். 

ஆகஸ்ட் 11-ம் தேதி முடிவடையும் அமர்நாத் யாத்திரை வரை வணிகங்களை மூடுமாறு அறிவுறுத்தப்பட்டதாகக் கூறி நகரின் பாந்தசௌக் பகுதியைச் சேர்ந்த கடைக்காரர்கள் குழு போராட்டம் நடத்தியதை அடுத்து இந்த கருத்துக்கள் வெளிவந்துள்ளன. 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT