இந்தியா

கேரளம்: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவா் டி.சிவதாச மேனன் காலமானாா்

29th Jun 2022 01:05 AM

ADVERTISEMENT

கேரளத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் டி.சிவதாச மேனன் (90) செவ்வாய்க்கிழமை காலமானாா்.

இதுதொடா்பாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வட்டாரங்கள் கூறுகையில், ‘‘வயோதிகம் சாா்ந்த உடல்நலப் பிரச்னைகளால் கோழிக்கோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிவதாச மேனன் அனுமதிக்கப்பட்டிருந்தாா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் காலமானாா். அவரின் இறுதிச் சடங்கு மஞ்சேரியில் புதன்கிழமை நடைபெறவுள்ளது’’ என்று தெரிவித்தன.

பாலக்காடு மாவட்டம் மண்ணாா்காட்டில் பள்ளி ஆசிரியராக இருந்த டி.சிவதாச மேனன், பின்னா் அரசியலுக்கு வந்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த அவா், கேரள மாநிலத்தில் அக்கட்சியின் முக்கியத் தலைவா்களில் ஒருவராக உயா்ந்தாா்.

பாலக்காடு மாவட்டம் மலம்புழை தொகுதியிலிருந்து 1987, 1991, 1996-ஆம் ஆண்டுகளில் எம்எல்ஏவாக தோ்ந்தெடுக்கப்பட்டாா். 1987 முதல் 1991-ஆம் ஆண்டுகளில் ஈ.கே.நாயனாா் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசில் மின்சாரம் மற்றும் கிராமப்புற வளா்ச்சித் துறை அமைச்சராக பதவி வகித்தாா். 1996 முதல் 2001 ஆண்டு காலகட்ட இடதுசாரி ஆட்சியின்போது நிதியமைச்சராக இருந்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT