இந்தியா

15 வினாடியில் 3 பேருக்கு டிக்கெட் கொடுத்து அசத்தும் ரயில்வே ஊழியர் (விடியோ)

29th Jun 2022 02:56 PM

ADVERTISEMENT


ரயில் பயணம் என்றாலே எல்லோருக்கும் பொதுவாகப் பிடிக்கும்தான். ஆனால் என்ன ரயிலுக்கு டிக்கெட் எடுக்க நீண்ட வரிசையில் காத்திருப்பதுதான் பலருக்கும் பிடிக்காது.

அப்படிப்பட்டவர்கள், 15 வினாடியில் 3 பேருக்கு டிக்கெட் கொடுத்து அசத்தும் ரயில்வே ஊழியரையும், அவரது விடியோவையும் பார்த்தால் அசந்து போவீர்கள்.

பொதுவாக வயதானவர்கள் பொறுமையாக வேலை செய்வார்கள் என்று கருதுவார்கள். ஆனால் இங்கே மும்பை ரயில் நிலையத்தில் பணியாற்றும் ரயில்வே ஊழியர், தனது அனுபவத்தின் மூலம், வேலையை மிக எளிதாகவும் வேகமாகவும் செய்து, ரயில் பயணிகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறார்.

 

ADVERTISEMENT

மும்பை ரயில்வே யூசர்ஸ் என்ற சுட்டுரைப் பக்கத்தில் அவரைப் பற்றிய விடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதனை பலரும் பகிர்ந்து வருகிறார்கள்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT