இந்தியா

ராஜஸ்தான்: நூபுர் சர்மாவை ஆதரித்தவர் கொடூரமாக வெட்டிக்கொலை

28th Jun 2022 06:28 PM

ADVERTISEMENT

 

 

நபிகள் நாயகத்துக்கு எதிராக சா்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த  பாஜக முன்னாள் செய்தித் தொடா்பாளா் நூபுா் சா்மாவை ஆதரித்தவர் கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

கடந்த மாத இறுதியில் ஞானவாபி மசூதி விவகாரம் தொடா்பான தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் நூபுா் சா்மா கலந்துகொண்டாா். அப்போது அவா் இஸ்லாமிய இறைத் தூதா் நபிகள் நாயகத்தை அவமதித்து பேசியதாகக் கூறப்பட்டது.

ADVERTISEMENT

அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் நூபுர் சர்மாவைக் கைது செய்யக்கோரி இஸ்லாமியர்கள் வன்முறைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.   கலவரத்தில் அரசு வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. 

இந்நிலையில், இன்று ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நூபுர் சர்மாவின் புகைப்படத்தை முகநூல் முகப்புப் படமாக வைத்த தையல் கடை உரிமையாளர் கண்ணையா லால் இரண்டு பயங்கரவாதிகளால் கொடூரமான முறையில் வெட்டிக்கொல்லப்பட்டார். கொலை செய்வதற்கு முன்பும் பின்பும் அதை விடியோவாக எடுத்து கொலையாளிகள் வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும், இச்செயலைக் கண்டித்து அப்பகுதியில் பலர் வன்முறைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT