இந்தியா

கேரள முன்னாள் நிதியமைச்சர் டி.சிவதாச மேனன் காலமானார்

28th Jun 2022 03:05 PM

ADVERTISEMENT

 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், கேரள முன்னாள் நிதியமைச்சருமான டி.சிவதாச மேனன் வயது மூப்பு காரணமாக செவ்வாய்க்கிழமை காலமானார். 

அவருக்கு வயது 90. கோழிக்கோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை 11.30 மணியளவில் அவர் உயிர் பிரிந்தது. 

அவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவரது உடல் புதன்கிழமை மஞ்சேரியில் தகனம் செய்யப்படுகிறது. 

ADVERTISEMENT

மன்னார்க்காட்டில் உயர்நிலைப் பள்ளி ஆசிரியராகப் பணியைத் தொடங்கிய மேனன், ஆசிரியர் சங்கங்களை அமைத்து அரசியலில் நுழைந்தார். 

அரசியலில் முக்கியப் பதவிகளை வகித்த பிறகு, மேனன் சிபிஐ எம் கட்சியின் முக்கியத் தலைவராக உயர்ந்தார். 

பின்னர், அவர் 1987, 1991 மற்றும் 1996இல் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மலம்புழா தொகுதியிலிருந்து சிபிஐ எம் வேட்பாளராக கேரள சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1987-1991ல் மின்சாரம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராகப் பணியாற்றினார். பின்னர், மேனன் 1996 முதல் 2001 வரை 5 ஆண்டுகள் நாயனார் அமைச்சரவையில் நிதி அமைச்சராகப் பணியாற்றினார். சிபிஐ(எம்) கட்சியின் மாநிலச் செயலர் உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளையும் வகித்துள்ளார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT