இந்தியா

ஐக்கிய அரபு அமீரகம் சென்றடைந்தார் பிரதமர் மோடி

28th Jun 2022 06:00 PM

ADVERTISEMENT

 

பிரதமர் நரேந்திர மோடி இன்று ஐக்கிய அரபு அமீரகம் சென்றடைந்தார். 

ஜி7 உச்சி மாநாட்டை முடித்துவிட்டு ஒருநாள் பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளார் பிரதமர் மோடி. அங்கு மறைந்த அதிபா் ஷேக் காலிஃபா பின் சயீது அல் நயான் மறைவுக்கு தனிப்பட்ட முறையில் துக்கம் அனுசரிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்தில் பிரதமர் மோடியை அமீரகத்தின் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான்  நேரில் சென்று வரவேற்றார்.

ADVERTISEMENT

முன்னதாக, ஜி7 மாநாட்டில்  அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் ஆகியோரை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று (திங்கள்கிழமை) சந்தித்தார்.

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், கனடா, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி7 அமைப்பின் மாநாடு ஜெர்மனியில் ஜூன் 26, 27 தேதிகளில் நடைபெற்றது.

 

Tags : UAE modi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT