இந்தியா

அமர்நாத் யாத்திரை பாதுகாப்பு: 130 துப்பறியும் நாய்கள்

28th Jun 2022 05:16 PM

ADVERTISEMENT

 

அமர்நாத் யாத்திரை இன்னும் இரண்டு நாட்களில் தொடங்கவுள்ள நிலையில் 130 துப்பறியும் நாய்களை பாதுகாப்பு காரணங்களுக்காக வரவழைக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர்  அரசாங்க அமர்நாத் குழு உறுப்பினர்களிடம் கலந்தாலோசித்து கோவிட் தொற்றுக் காரணமாக 2020-2021 ஆண்டுகளில் அமர்நாத் யாத்திரைக்கு தடை விதித்திருந்தது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அமர்நாத் யாத்திரை தொடங்க இருப்பதால் இந்திய அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளை முந்தைய ஆண்டுகளை விட இந்தாண்டு இரு மடங்கு  அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

ஜூன் 30இல் தொடங்கி 43 நாட்கள் நடக்கவிருக்கும் அமர்நாத் யாத்திரைக்கு வெடிப்பொருட்களை கண்டறியும் 130 துப்பறியும் நாய்களை முதன் முதலாக பாதுகாப்புப் படையினர் பயன்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT