இந்தியா

பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை உறுதி செய்க: எஸ்பிகளுக்கு கேரள காவல்துறை உத்தரவு

28th Jun 2022 12:46 PM

ADVERTISEMENT

 

கேரளத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை உறுதி செய்யுமாறு அனைத்து மாவட்ட காவல்துறைத் தலைவர்களுக்கும் அம்மாநில காவல்துறை உத்தரவிட்டுள்ளது. 

கேரள மாநிலத்தில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அம்மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. 

அதன்படி, பொது மற்றும் பணியிடங்களில், கூட்டம் கூடும் இடங்களில், போக்குவரத்தைப் பயன்படுத்தும்போது முகக்கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். இதனை உறுதிசெய்ய அனைத்து மாவட்ட காவல்துறைத் தலைவர்களுக்கு கேரள காவல்துறை உத்தரவிட்டுள்ளது. 

ADVERTISEMENT

இந்த உத்தரவை மீறினால் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் விதிகளின்படி தண்டனை விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

மாநிலத்தில் தினசரி கரோனா தொற்று எண்ணிக்கை மற்றும் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையடுத்து காவல்துறை இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. 

கடந்த வாரத்தில் மாநிலத்தில் புதிதாக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொற்றுகளைப் பதிவு செய்துள்ளதாக அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன. ஜூன் 27 வரை, மாநிலத்தில் செயலில் உள்ளவர்களின் எண்ணிக்கை 27,218 ஆகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT