இந்தியா

தில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சர்மா பதவியேற்பு

28th Jun 2022 12:13 PM

ADVERTISEMENT

 

தில்லி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சதீஷ் சந்திர சர்மா செவ்வாய்க்கிழமை பதவியேற்றார். 

ராஜ் நிவாஸில் நடந்த விழாவில் 60 வயதான நீதிபதி சர்மாவுக்கு, துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். 

விழாவில் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் சோம்நாத் பார்தி, மதன் லால் உள்ளிட்டோரும், மூத்த நீதிபதிகள் மற்றும் வழக்குரைஞர்களும் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

நீதிபதி சர்மா இதற்கு முன்பு தெலங்கானா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றியவர்.

நீதிபதி டி.என் படேல் ஓய்வு பெற்ற பிறகு, வழக்கமான தலைமை நீதிபதி இல்லாமல் தில்லி உயர்நீதிமன்றம் செயல்பட்டு வந்தது. 

நீதிபதி விபின் சங்கி கடந்த மார்ச் 13ம் தேதி முதல் தலைமை நீதிபதியாகப் பதவி வகித்து வருகிறார். தற்போது அவர் உத்தரகண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT