இந்தியா

மும்பையில் 4 மாடிக் கட்டடம் சரிந்து விழுந்தது; 12 பேர் மீட்பு

DIN


மும்பை: மும்பையில் நான்கு அடுக்குமாடிக் கட்டடம் சரிந்து விழுந்தது. இதில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் இதுவரை 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

கட்டட இடிபாடுகளில் 10க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. கட்டட இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகிறார்கள்.

குர்லா அருகே நாயக் நகர் பகுதியில் அமைந்திருந்த அடுக்குமாடி குடியிருப்புப் கட்டடம் நள்ளிரவில் இடிந்துவிழுந்து விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கட்டட இடிபாடுகளில் 20 முதல் 22க்கும் மேற்பட்டவர்கள் சிக்கியிருக்கக் கூடும் என்று அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர். இதில் இதுவரை 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். ஏராளமான தீயணைப்பு வீரர்கள், மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பு வாகனங்களும், நவீன கருவிகளும் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளிகளில் அதிவேக இணைய வசதி: தமிழக அரசு

உடலுறுப்புகள் தானம் செய்தவரின் குடும்பத்தினருக்குப் பாராட்டு, உதவி

1,850 கிலோ பதுக்கல் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவா் கைது

இணைய வழியில் இருவரிடம் ரூ. 8 லட்சம் மோசடி

பத்தாம் வகுப்பு தோ்வு முடிவுகள்: நாளை வெளியீடு

SCROLL FOR NEXT