இந்தியா

பாஜகவில் சேருமாறு மாணவிகளுக்கு அழைப்பு விடுத்த கல்லூரி முதல்வர்

DIN

குஜராத்தில் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர்களாக சேருமாறு மாணவிகளுக்கு அழைப்பு விடுத்த கல்லூரி முதல்வரால் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 

பாவ் நகரில் உள்ள ஸ்ரீமதி என்.சி.காந்தி மற்றும் பி.வி.காந்தி கலை மற்றும் வணிகக் கல்லூரியில் ஜூன் 24 அன்று கல்லூரியின் முதல்வர் ரஞ்சன்பென் கோஹில் சுற்றறிக்கை ஒன்றை கல்லூரியில் வெளியிட்டார். 

அதில், முனிசிபல் கார்ப்பரேஷன் பகுதியில் வசிப்பவர்கள் பாஜவில் உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்பதால், மாணவிகள் பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களைக் கொண்டு வரவேண்டும். 

மேலும்,  தேர்தல் உறுப்பினர்களான பிறகு மாணவிகள் கல்லூரி வளாகத்திற்குள் தங்கள் தனிப்பட்ட கைப்பேசிகளை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார். 

இந்த சுற்றறிக்கை மாணவிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக மாணவிகள் கல்லூரி அறக்கட்டளையிடம் புகார் அளித்தனர். மேலும், இந்த சுற்றறிக்கை அரசியல் எதிர்க்கட்சிகளுக்கிடையே பெரும் சர்ச்சையையும், விமர்சனத்தையும் ஏற்படுத்தியது. 

இதையடுத்து கல்லூரி அறங்காவலர்கள் உடனடியாக ஒரு கூட்டத்தைக் கூட்டி முதல்வரிடம் இதுதொடர்பாக கேட்டறிந்தனர். இதையடுத்து, முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும்படி அறங்காவலர் குழு தலைவர் தீரன் வைஷ்ணவ் கூறினார். 

1951இல் ஸ்ரீமதி என்.சி.காந்தி மற்றும் பி.வி.காந்தி கலை மற்றும் வணிகக் கல்லூரி நிறுவப்பட்டது. இதன் ஒரே குறிக்கோள் பெண் குழந்தைகளுக்குக் கல்வி வழங்குவது, அவர்களுக்கு கலாசார மற்றும் உடற்கல்வி வழங்குதல், போட்டி உலகிற்கு அவர்களை தயார்ப்படுத்துவது மட்டுமே. கல்லூரி வளாகத்தில் அரசியல் செயல்பாடுகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதது, எனவே பொறுப்பு முதல்வர் ராஜினாமா செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. 

மாநிலத்தில் மாணவர் சங்கங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், கல்லூரி வளாகத்தில் மாணவர் தேர்தல்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்று அவர் கூறினார். 

மேலும், முதல்வர் மட்டுமல்ல, அறங்காவலரும் தண்டிக்கப்பட வேண்டும் என்று இந்தியத் தேசிய மாணவர் சங்க (என்எஸ்யுஐ) தலைவர் கிரிராஜ்சிங் வாலா கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

SCROLL FOR NEXT