இந்தியா

புதிய சேவை: எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

27th Jun 2022 04:26 PM

ADVERTISEMENT


எஸ்பிஐ வாடிக்கையாளர்கள், இனி ஞாயிற்றுக்கிழமையிலும் வங்கிச் சேவையை பெறும் வகையில் புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது.

நாட்டின் முன்னனி பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் பல வங்கிச் சேவைகளை பெற நேரடியாக வங்கிக்குத்தான் செல்ல வேண்டும் என்பது இல்லை. குறிப்பாக ஞாயிற்றுக்கிழமையில் கூட நீங்கள் மிக எளிதாக வங்கிச் சேவையை பெற முடியும்.

இதையும் படிக்க.. ரோட்டுக் கடையில் சாப்பிடுகிறவரா நீங்கள்? ஆபத்தை அறிந்துகொள்ள...

இதற்கான இலவச உதவி எண்களை எஸ்பிஐ அறிவித்துள்ளது. 1800 1234 அல்லது 1800 2100 என்ற இந்த இலவச உதவி எண்கள் மூலம், எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்திருக்கும் 44 கோடி வாடிக்கையாளர்களும், வீட்டிலிருந்தே அதுவும் ஞாயிற்றுக்கிழமையிலும் கூட வங்கிச் சேவையை பெற முடியும். பல சேவைகளைப் பெற வாடிக்கையாளர்கள் வங்கிக்கு வரவேண்டிய தேவையே இருக்காது.

ADVERTISEMENT

 

உங்களது வங்கித் தொடர்பான நடவடிக்கைகளைப் பற்றி இனி கவலைப்பட வேண்டாம். எஸ்பிஐயின் 1800 1234 அல்லது 1800 2100 என்ற இலவச உதவி எண்களுக்கு அழையுங்கள் என்று எஸ்பிஐ தனது சுட்டுரைப் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இதன் மூலம் 24x7 முறையில் வங்கிச் சேவையை பெற முடியும்.

வங்கிக் கணக்கிலிருக்கும் தொகை, கடைசியான மேற்கொண்ட 5 பணப்பரிவர்த்தனைகள், காசோலையின் நிலை, ஏதேனும் காரணத்தால் ஏடிஎம் அட்டை ரத்து செய்யப்பட்டால், புதிய ஏடிஎம் அட்டைக்கு விண்ணப்பித்தல் போன்ற பல சேவைகளைப் பெறமுடியும்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT