இந்தியா

ரயில்வேயில் சப்தமில்லாமல் ஒழிக்கப்பட்ட 92,000 பணியிடங்கள்

27th Jun 2022 04:55 PM

ADVERTISEMENT

புது தில்லி: நாட்டின் வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடுவதாக, மோடி அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் இருந்த நேரத்தில், நாட்டின் மிகப்பெரிய வேலைவாய்ப்பளிக்கும் இந்திய ரயில்வேயில் 92,000 பணியிடங்கள் ஒழிக்கப்பட்டுள்ளன.

2018 - 19ஆம் ஆண்டுகளிலும், 2021 - 22ஆம் ஆண்டிகளிலும் இந்திய ரயில்வேயில் பல்வேறு நிலைகளிலான பணியிடங்கள் முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டன.

இதையும் படிக்க.. ரோட்டுக் கடையில் சாப்பிடுகிறவரா நீங்கள்? ஆபத்தை அறிந்துகொள்ள...

இத்தனை பணியிடங்களை ஒட்டுமொத்தமாக ஒழித்துக்கட்டிவிட்டபோதிலும் கூட, இந்திய ரயில்வேயில் தற்போது 2.98 லட்சம் காலிப்பணியிடங்கள் இருக்கின்றன என்ற புள்ளிவிவரம் வேலையில்லாத் திண்டாட்டத்தால் அவதியுறும் லட்சோப லட்ச இளைஞர்களின் உறக்கத்தை தீயிட்டு பொசுக்குகிறது.

ADVERTISEMENT

பணிச்சுமை மற்றும் பணிச்சூழலுக்கு ஏற்ப, புதிய பணியிடங்களை உருவாக்குதல் மற்றும் பணியிடங்கள் ரத்து செய்யப்படுவது வழக்கம்தான். ஆனால், இந்திய ரயில்வேயில் 2019 - 20ஆம் நிதியாண்டில் மட்டும் 17 மண்டலங்களிலிருந்து 31,275 பணியிடங்கள் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்றத்தின் கடந்த கூட்டத் தொடரின்போதே, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், 92 ஆயிரம் பணியிடங்கள் ரயில்வேயிலிருந்து நீக்கப்பட்டது குறித்து அறிவித்தார். அற்போது அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியிருக்கிறது.

அதன்படி, ஒட்டுமொத்தமாக நீக்கப்பட்ட பணியிடங்கள் 92,090 எனவும், இது 2018-19ல் 23,366 ஆகவும், 2018 -19ல் 31,275 ஆகவும், 2021-22ல் 27,477 ஆகவும் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT