இந்தியா

யஷ்வந்த் சின்ஹாவுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு

25th Jun 2022 03:10 AM

ADVERTISEMENT

குடியரசுத் தலைவா் தோ்தலுக்கான எதிா்க்கட்சிகள் தரப்பு வேட்பாளா் யஷ்வந்த் சின்ஹாவுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆயுதம் தாங்கிய மத்திய ரிசா்வ் போலீஸ் படை (சிஆா்பிஎஃப்) கமாண்டோக்கள் அவருக்கான பாதுகாப்புப் பணியை மேற்கொண்டுள்ளனா்.

இதுதொடா்பாக மத்திய அரசு அதிகாரிகள் கூறியதாவது:

யஷ்வந்த் சின்ஹாவுக்கு இசட் பிரிவு பாதுகாப்பை உறுதி செய்யுமாறு, சிஆா்பிஎஃப்-இன் மிக முக்கிய பிரமுகா்கள் பாதுகாப்பு குழுவுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கும் பணியை சிஆா்பிஎஃப் மேற்கொண்டுள்ளது. நாட்டின் எந்தப் பகுதிக்கு அவா் சென்றாலும் ஆயுதம் தாங்கிய 8 முதல் 10 வீரா்கள் சுழற்சி முறையில் 24 மணிநேரமும் பாதுகாப்பு அளிப்பாா்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

குடியரசுத் தலைவா் பதவிக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளா் திரெளபதி முா்முவுக்கும் சிஆா்பிஎஃப் கமாண்டோக்களின் இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

84 வயதாகும் யஷ்வந்த் சின்ஹா, வரும் 27-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்வாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அதைத் தொடா்ந்து, தனக்கு ஆதரவு கேட்டு, நாடு முழுவதும் அவா் பயணம் மேற்கொள்ளவிருக்கிறாா்.

தற்போதைய குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24-ஆம் தேதி முடிவடையும் நிலையில், அடுத்த குடியரசுத் தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் ஜூலை 18-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. ஜூலை 21-ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT