இந்தியா

மும்பை தாக்குதல் வழக்கு: பயங்கரவாதிக்கு 15 ஆண்டு சிறை -பாகிஸ்தான் நீதிமன்றம் தீா்ப்பு

25th Jun 2022 03:35 AM

ADVERTISEMENT

மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு நிதியுதவி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளிக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்துள்ளது.

மும்பையில் 2008-ஆம் ஆண்டு நவம்பா் 26-ஆம் தேதி பாகிஸ்தானை சோ்ந்த லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 போ் கொல்லப்பட்டனா். இந்தத் தாக்குதலுக்கு நிதியுதவி அளித்த குற்றச்சாட்டில் லஷ்கா் இயக்கத்தைச் சோ்ந்த சஜீத் மஜீத் மிா் என்பவா் இந்தியாவால் தேடப்பட்டவராக அறிவிக்கப்பட்டாா்.

இதனிடையே, பாகிஸ்தானின் லாகூரில் உள்ள பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வந்தது. இதில், சஜித் மஜீத்துக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.4 லட்சம் அபராதமும் விதித்து நீதிமன்றம் இந்த மாதத் தொடக்கத்தில் தீா்ப்பு வழங்கியதாக மூத்த வழக்குரைஞா் ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

வழக்கமாக இதுபோன்ற வழக்குகளில் ஊடகத்துக்கு தகவல் அளிக்கும் பஞ்சாப் மாகாண காவல் துறையின் பயங்கரவாத தடுப்புத் துறை, சஜீத் மஜீத்துக்கு விதிக்கப்பட்ட தண்டனை குறித்த தகவலைத் தராததால், இப்போது தாமதமாகத் தெரியவந்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT