இந்தியா

கர்நாடகத்தில் உயிரிழந்த நிலையில் 7 சிசுக்கள் கண்டெடுப்பு

25th Jun 2022 08:37 AM

ADVERTISEMENT

கர்நாடகத்தில் உயிரிழந்த நிலையில் 7 சிசுக்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் முதலாகி என்ற பகுதியில் சாக்கடையில் ஒரு பாட்டிலில் அடைக்கப்பட்ட நிலையில் 7 சிசுக்களின் உடல்கள் கிடைத்துள்ளன. 

பின்னர் சோதிக்கப்பட்டதில் 7 சிசுக்களும் 5 மாத கரு என்று கண்டறியப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதார அதிகாரி மகேஷ் கோனி தெரிவித்தார்.

முதலாகி காவல்நிலைய போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.  

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT