இந்தியா

நண்பருடன் வாழ்ந்து வந்த பெண்; முன்னாள் கணவர் செய்த கொடூரம்

25th Jun 2022 03:40 PM

ADVERTISEMENT

ஆக்ரா: அடுக்குமாடிக் குடியிருப்பின் நான்காவது மாடியிலிருந்து கைகள் கட்டப்பட்ட பெண் ஒருவர் தூக்கி வீசப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில், அவரது கணவர் உள்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட ரித்திகா சிங், தனது கணவரிடமிருந்து பிரிந்த பிறகு, முகநூல் மூலம் அறிமுகமான நபருடன் அடுக்குமாடிக் குடியிருப்பில் வாழ்ந்து வந்தார். இந்த வழக்கில், பலியான பெண்ணின் கணவர் ஆகாஷ் கௌதம் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்கலாமே.. விட்டதைப் பிடித்த விக்ரம் (மாதித்தன்)? தன் முயற்சியில் சற்றும் மனந்தளராமல்...

முதற்கட்ட விசாரணையில், ரித்திகா, தனது நண்பர் விபுல் அகர்வாலுடன் வாழ்ந்து வந்துள்ளார். காஸியாபாத்தைச் சேர்ந்த ரித்திகா, ஆகாஷ் கௌதம் என்பவரை 2014ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு 2018ல் பிரிந்துவிட்டனர்.

ADVERTISEMENT

இந்த நிலையில்தான், வெள்ளிக்கிழமை இரவு, இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்களுடன் ரித்திகாவின் வீட்டுக்கு வந்த ஆகாஷ் கௌதம், சண்டை போட்டுள்ளார். ரித்திகாவையும் விபுலையும் தாக்கியுள்ளனர். பிறகு, விபுலின் கைகளைக் கட்டி கழிவறைக்குள் அடைத்துவிட்டு, ரித்திகாவின் கைகளைக் கட்டி மாடியிலிருந்து தூக்கி வீசியதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து விபுல் கூறிய தகவலின் அடிப்படையில், ஆகாஷ் கௌதம் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 

Tags : CCTV footage
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT