இந்தியா

பரபரப்பான அரசியல் சூழல்: சரத் பவாருடன் உத்தவ் தாக்கரே சந்திப்பு

24th Jun 2022 11:19 PM

ADVERTISEMENT

 

மகாராஷ்டிரத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் சிவசேனை தலைவரும், மாநில முதல்வருமான உத்தவ் தாக்கரே தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை வெள்ளிக்கிழமை சந்தித்து பேசினார்.

மகாராஷ்டிரத்தில் சிவசேனை - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் இணைந்த 'மகா விகாஸ் அகாடி' கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிவசேனை கட்சியின் மூத்தத் தலைவர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் 40க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களுடன் அசாம் மாநிலம் குவாஹாத்தியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ளனர். 

இதையும் படிக்க | 'உத்தவ் தாக்கரேவும் ஹோட்டலுக்கு வரலாம்' - அசாம் முதல்வர் கிண்டல் பேச்சு!

ADVERTISEMENT

தொடர்ந்து ஏக்நாத் ஷிண்டே தரப்பு ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மகாராஷ்டிர அரசு கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் சிவசேனை கட்சியின் தலைவரும், மாநில முதல்வருமான உத்தவ் தாக்கரே தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரை வெள்ளிக்கிழமை சந்தித்து பேசினார். 

இதையும் படிக்க | இந்த ஆட்சியை நிறைவு செய்வோம்: சஞ்சய் ரௌத்

இந்த சந்திப்பின்போது கூட்டணியின் அரசியல் நிலை குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT