இந்தியா

உ.பி.யில் கன்வர் யாத்திரைக்கான ஏற்பாடுகள் தீவிரம்

IANS

புகழ்பெற்ற கன்வர் யாத்திரைக்கான வருடாந்திர ஏற்பாடுகளை உத்தரப் பிரதேச அரசு மேற்கொண்டு வருகின்றது. 

உத்தரகண்ட், உத்தரப் பிரதேச மாநிலங்களில் புகழ்பெற்ற கன்வர் யாத்திரையில் பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம். அதன்படி, இந்தாண்டு கன்வர் யாத்திரை உத்தரப் பிரதேசத்தில் ஜூலை 14 முதல் ஆகஸ்ட் 12 வரை தொடங்க உள்ளது. அதற்கான முழு ஏற்பாடுகளை அரசு செய்து வருகின்றது. 

யாத்திரைக்குச் செல்லும் பாதைகளில் தூய்மை, சுகாதாரம் மற்றும் மின்சாரம். சுத்தமான குடிநீர், கழிப்பறைகள் ஆகியவற்றை உறுதி செய்வதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. 

கன்வர் யாத்ரா என்பது 'கன்வாரியாஸ்' என்று அழைக்கப்படும் சிவபெருமானின் பக்தர்கள் ஆண்டுதோறும் சிவன் கோயில்களுக்கு யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது.

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்வார், கௌமுக் மற்றும் கங்கோத்ரி ஆகிய இடங்களில் இருந்து கங்கை நதியின் நீரைப் பக்தர்கள் எடுத்துச் சென்று நூற்றுக்கணக்கான மைல்கள் கடந்து தங்கள் உள்ளூர் சிவன் கோயில்களில் காணிக்கையாக எடுத்துச் செல்கின்றனர்.

இதுகுறித்து மீரட் மாவட்ட நீதிபதி தீபக் மீனா கூறுகையில், 

பல்வேறு கோயில்களில் கன்வர் யாத்திரை முதல் 'ஜலாபிஷேகம்' வரையிலான நிகழ்ச்சிகளை பிளாஸ்டிக் இல்லாமல் நடத்த சிறப்பு திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது. 

யாத்திரைக்கான முழு திட்டத்தையும் பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றச் சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து முக்கிய இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதை உறுதிசெய்யப்படும் என்றார். 

மேலும், கன்வர் யாத்திரை செல்லும் வழித்தடங்களில் உள்ள உணவகங்கள் மற்றும் தாபாக்களின் உரிமையாளர்கள், ஒவ்வொரு தாபாவிலும் நியமிக்கப்பட்ட இடத்தில் உணவின் விலைப் பட்டியலை வைக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT