இந்தியா

தமிழக முதல்வர் கருத்துக்கு ஆதரவு தெரிவித்த ஜார்க்கண்ட் முதல்வர்

17th Jun 2022 06:34 PM

ADVERTISEMENT

மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில் கூட்டத்தை ஆண்டுக்கு மூன்று முறை நடத்திட வேண்டுமென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்திற்கு ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

மத்திய மாநில அரசுகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகளை களைய கவுன்சில் கூட்டங்கள் முறையாக நடத்தப்பட வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு வியாழக்கிழமை கடிதம் எழுதியிருந்தார். 

இதையும் படிக்க | ‘அக்னிபத் திட்டம் இளைஞர்களை வேலையில்லாதவர்களாக்கி விடும்’: சித்தராமையா எச்சரிக்கை

மேலும் அவர் தனது கடிதத்தில் கூட்டாட்சி உறவுகளை வலுப்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள கவுன்சில் கூட்டங்களை உடனடியாக நடத்த வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். 

ADVERTISEMENT

இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் வலியுறுத்தலுக்கு ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

 

இதுதொடர்பாக ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தனது சுட்டுரைப்பதிவில், “முதல்வர் மு.க.ஸ்டாலினின் கருத்திற்கு நான் ஆதரவளிக்கிறேன். அனைத்து மாநில அரசுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி கூட்டாட்சி தத்துவத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT