இந்தியா

மருத்துவரை கரம்பிடித்தார் பஞ்சாப் முதல்வர்!

7th Jul 2022 01:13 PM

ADVERTISEMENT

சண்டீகரில் மருத்துவர் குா்பிரீத் சிங்கை(32) பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்(48) வியாழக்கிழமை திருமணம் செய்தார்.

இது பகவந்த் மானின் இரண்டாவது திருமணமாகும். அவரது முதல் திருமணம் கடந்த 2015-இல் முறிந்தது. முதல் திருமணம் மூலம் அவருக்கு 21 வயதில் ஒரு மகளும், 17 வயதில் மகனும் உள்ளனா். கடந்த மாா்ச் மாதம் பகவந்த் மான் பஞ்சாப் முதல்வராகப் பதவியேற்ற நிகழ்ச்சியில் அவரது மகளும், மகனும் அமெரிக்காவில் இருந்து வந்து பங்கேற்றனா்.

இதையும் படிக்க | கருணாநிதி அளித்த பரிசுத்தொகை, காக்கா முட்டை சிறுவர்களுக்குப் பாராட்டு: தோனி பற்றிய சுவையான தகவல்கள்!

2014-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் பகவந்த் மானுக்கு ஆதரவாக அவரின் மனைவி இந்தா்பிரீத் கெளா் தீவிர பிரசாரம் மேற்கொண்டாா். எனினும், அடுத்த ஆண்டிலேயே அவா்கள் விவாகரத்து பெற்றனா். இந்தா்பிரீத் கௌா் இப்போது அமெரிக்காவில் வசித்து வருகிறாா்.

ADVERTISEMENT

இந்நிலையில், மருத்துவர் குா்பிரீத் சிங்கை சண்டீகரில் உள்ள இல்லத்தில் எளிமையான முறையில் பகவந்த் மான் இன்று திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிகழ்பில் தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைமை அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால், கட்சியின் மூத்த தலைவர்கள், நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT