இந்தியா

நாட்டில் இதுவரை 198.33 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டன: சுகாதாரத்துறை

7th Jul 2022 11:54 AM

ADVERTISEMENT


நாட்டில் இதுவரை 198.33 கோடி கரோனா தடுப்பூசிகள் டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை வியாழக்கிழமை வெளியிட்டுள்ள தரவுகளின்படி,

நாட்டில் இதுவரை மொத்தம் 1,98,33,18,772(198.33 கோடி) தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளது. 

12-14 வயதிற்குள்பட்ட இளம் பருவத்தினருக்கு கரோனா தடுப்பூசி மார்ச் 16 இல் தொடங்கப்பட்டது. இதுவரை, சுமார் 3,71,62,944-க்கும் அதிகமான முதல்கட்ட தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளது. மேலும் 2,45,15,244 பேர் இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்தியுள்ளன. 

ADVERTISEMENT

18-44 வயதினருக்கு கடந்த ஏப்ரல் 10-ம் தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. முதல் டோஸ் 55,84,51,676 ஆகவும், இரண்டாவது டோஸ் 50,30,59,101 பேருக்கும், முன்னெச்சரிக்கையாக 34,58,590 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

இதையும் படிக்கலாம்: சென்னையில் முகக்கவசம் அணியாத பயணிகளுக்கு அனுமதி மறுப்பு

மேலும், நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18,930 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்  14,650 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை (பெருந்தொற்றின் தொடக்கத்திலிருந்து) 4,29,21,977 ஆக உள்ளது.

நாட்டில் தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை  1,19,457 ஆகக் குறைந்துள்ளது, இது நாட்டின் மொத்த தொற்று பாதிப்பில்  0.27 சதவிகிதம் ஆகும். குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.52 சதவிகிதமாக உள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 4,38,005 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதுவரை மொத்தம் (86,53,43,689) 86.53 கோடி கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. 

ADVERTISEMENT
ADVERTISEMENT