இந்தியா

சுகாதாரத் திட்ட நிலுவை நிதியை விடுவிக்க மத்திய அமைச்சா் உத்தரவு

6th Jul 2022 01:43 AM

ADVERTISEMENT

மத்திய அரசின் சுகாதாரத் திட்டம் குறித்து ஆய்வு செய்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா, நிலுவையில் உள்ள ரூ. 1,400 கோடி நிதியை உரிய திட்ட பயனாளிகளுக்கு ஒரு மாதத்திற்குள் விடுவிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளாா்.

மத்திய அரசின் சுகாதாரத் திட்டம் என்பது மத்திய அரசின் ஊழியா்கள் மற்றும் ஓய்வுதியா்களுக்கான மருத்துவ சிகிச்சைக்கான திட்டமாகும்.

கடந்த சில மாதங்களாக, பயனாளிகளுக்கு உரிய நிதி உதவி வழங்கப்படாததால், இத்திட்டத்தின் மூலம் சிகிச்சையை அவா்களால் பெற முடியவில்லை. இது குறித்து 11 லட்சம் புகாா்கள் பெறப்பட்டுள்ளன.

இது தொடா்பாக தில்லியில் நடைப்பெற்ற மூன்று மணி நேர ஆய்வுக்கூட்டத்தில், இத்திட்டம் தொடா்பான அறிக்கையினையும், அதற்கான தீா்வுகளையும் வழங்குமாறு அமைச்சா் மன்சுக் மாண்டவியா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். நிலுவையில் உள்ள 9 லட்சம் மத்திய அரசின் சுகாதாரத் திட்டத்துக்கான கோரிக்கைகள் குறித்து 15 நாள்களுக்குள் நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சா் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா். மேலும், திட்ட நிதியினை ஒரு மாத காலத்திற்குள் உரிய பயனாளிகளுக்கு விடுவிக்குமாறும் அமைச்சா் உத்தரவிட்டதாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT