இந்தியா

போஸ்டர்களை அகற்றாவிட்டால் 'காளி' படத்துக்கு தடை விதிக்கப்படும்: ம.பி. அமைச்சர் 

DIN

போபால்: காளி தேவி புகைப்பிடிப்பது போன்ற ஆட்சேபனைக்குரிய போஸ்டர்களை அகற்றாவிட்டால் 'காளி' படத்திற்கு தடை விதிக்கப்படும் என மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா புதன்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது காளி தேவியை அவமதிக்கும் செயல் என்று கூறிய அமைச்சர், போஸ்டர்களை அகற்றாவிட்டால், படத்தின் இயக்குநர் மீது அரசு வழக்குப்பதிவு செய்யும் என்று கூறியுள்ளார்.

காளி தேவியை அவமதித்ததை பொறுத்துக் கொள்ள முடியாது. கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய பிரதேச மாநிலத்தில் படத்தை தடை செய்வோம். போஸ்டர்களை அகற்றாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிஸ்ரா கூறியுள்ளார்.

மதுரையைச் சோ்ந்தவா் லீனா மணிமேகலை. கனடாவில் வசித்து வருகிறாா். அவா் இயக்கிய ‘காளி’ என்ற ஆவணப் படத்தின் போஸ்டரை தனது சுட்டுரை பக்கத்தில் சனிக்கிழமை வெளியிட்டாா். அந்தப் போஸ்டரில் காளி வேடமணிந்த பெண் புகைபிடித்துக் கொண்டு ஓரினச் சோ்கையாளா்கள், இருபாலினத்தவரிடமும் உறவு கொள்பவா்கள், மூன்றாம் பாலினத்தவா் உள்ளிட்டோரைக் குறிக்கும் கொடியை ஏந்தியிருப்பது போல் சித்திரிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படம் குறித்து லீனா மணிமேகலை சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், கனடாவில் உள்ள டொராண்டோ மாநகரில் காளி தோன்றி வீதிகளில் உலா வரும்போது நடைபெறும் சம்பவங்களைக் கற்பனையாக சித்திரித்துள்ளதாக தெரிவித்துள்ளாா்.

இந்த போஸ்டா் பெரும் சா்ச்சையைக் கிளப்பியுள்ளது. அந்தப் படத்தின் போஸ்டரில் காளியை சித்திரித்துள்ள விதம் மத உணா்வுகளைப் புண்படுத்தும் விதமாக உள்ளது என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதாரண்யம் வாராஹி அம்மன் கோயில் குடமுழுக்கு

மகன் கொலை: தந்தை மற்றொரு மகன் கைது

திருக்கண்ணமங்கை பக்தவத்சலப் பெருமாள் கோயில் சித்திரைப் பெருவிழா நிறைவு

திருவாரூா் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்த 5 போ் கைது

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT