இந்தியா

ஒடிசாவிலிருந்து 'கோசலை': புதிய மாநிலம் அமைக்கக் கோரி போராட்டம்

6th Jul 2022 07:59 PM

ADVERTISEMENT

 

புவனேஸ்வர்: ஒடிசாவிலிருந்து 'கோசலை' என்ற புதிய மாநிலம் அமைக்கக் கோரி சமூக ஆர்வலர்கள் பழங்குடி மக்களைப் போன்று வேடமணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மேலும், தனி மாநிலம் அமைக்க வலியுறுத்தும் விதமாக மாநில சட்டப்பேரவை வரை பேரணியாக சென்று பழங்குடி மக்களின் பாரம்பரிய நடனமாடினர். 

மேற்கு ஒடிசாவிலுள்ள கோசலை பகுதியை தனி மாநிலமாக அறிவிக்கக்கோரி நீண்டகாலமாக பொதுமக்களும், சமூக ஆர்வல்ர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

ADVERTISEMENT

கோசலை மாநில இயக்கம் என்ற அமைப்பின் மூலம் சமூக ஆர்வலர்களும் அரசுக்கு கோரிகை வைத்து வருகின்றனர். மேற்கு ஒடிசாவின் யுவ மோர்ச்சா, கோசலை இளைஞர் ஒருங்கிணைப்புக் குழு, கோசலை மாநில ஒருங்கிணைப்புக் குழு ஆகியவை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

படிக்கஒரு இஸ்லாமிய எம்பி கூட இல்லாத பாஜக: முடிவுக்கு வருகிறதா இஸ்லாமியர்கள் பிரதிநிதித்துவம்?

இந்நிலையில் ஒடிசா மாநிலத்தில், குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், சமூக ஆர்வலர்கள் அப்பகுதி பழங்குடி மக்களைப்போன்று வேடமணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பேரவை உள்ள சாலையை பேரணியாகச் சென்று முற்றுகையிட்ட அவர்கள், பாரம்பரிய நடனமாடி, தனி மாநில கோரிக்கையை முன்வைத்தனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT