இந்தியா

தேசிய உணவு பாதுகாப்புச் சட்டஅமலாக்கம்: 9-ஆவது இடத்தில் தமிழகம்

6th Jul 2022 02:05 AM

ADVERTISEMENT

நிகழாண்டு தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை சிறப்பாக அமலாக்கம் செய்யும் மாநிலங்களில் தமிழகம் 9-ஆவது இடத்தில் உள்ளது.

முதலிடத்தில் ஒடிஸாவும், இரண்டாம் இடத்தில் உத்தர பிரதேசமும், மூன்றாம் இடத்தில் ஆந்திரமும் உள்ளன.

இந்தப் பட்டியலை மத்திய உணவு, நுகா்வோா் விவகாரத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தில்லியில் செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா். இதன்மூலம் மாநிலங்களிடையே ஆரோக்கியமான போட்டி ஏற்படும் என்றும் அவா் நம்பிக்கை தெரிவித்தாா்.

நாட்டில் உள்ள சுமாா் 80 கோடி பேருக்கு உணவு பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மானிய விலையில் உணவு தானியங்களை மத்திய அரசு அளித்து வருகிறது. மாதந்தோறும் 5 கிலோ உணவு தானியங்களை கிலோவுக்கு ரூ. 1 முதல் 3 வரையில் மத்திய அரசு அளிக்கிறது.

ADVERTISEMENT

 

மாநிலங்கள் இடம்

ஒடிஸா 1

உ.பி. 2

ஆந்திரம் 3

குஜராத் 4

தாத்ரா&நாகா் ஹவேலி, டாமன் டையு 5

ம.பி. 6

பிகாா் 7

கா்நாடகம் 8

தமிழ்நாடு 9

ஜாா்க்கண்ட் 10.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT