இந்தியா

பங்குச் சந்தை தகவல் கசிவு மோசடி வழக்கு:மும்பை முன்னாள் காவல் ஆணையரிடம் விசாரணை

DIN

பங்குச் சந்தை தகவல் கசிவு மோசடி வழக்கு தொடா்பாக மும்பை முன்னாள் காவல் ஆணையா் சஞ்சய் பாண்டேயிடம் அமலாக்கத் துறையினா் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினா்.

பணப் பரிவா்த்தனை மோசடி சட்டத்தின் கீழ் அவரிடம் விசாரணை நடத்தி அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கடந்த ஜூன் 30-ஆம் தேதி மும்பை காவல் ஆணையா் பதவியில் இருந்து சஞ்சய் பாண்டே ஓய்வு பெற்றாா். மாா்ச் 1-ஆம் தேதி முதல் அவா் மகாராஷ்டிர மாநில பொறுப்பு டிஜிபியாகவும் பதவி வகித்தாா்.

தேசிய பங்குச் சந்தையின் பாதுகாப்புத் தணிக்கையை ஆய்வு செய்யும் பல்வேறு நிறுவனங்களில் கடந்த 2001-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐசெக் பாதுகாப்பு நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனத்தின் இயக்குநா் பதவியில் இருந்து 2006-இல் சஞ்சய் பாண்டே விலகினாா். அதன்பின்னா் அவரது மகனும் தாயாரும் இந்த நிறுவனத்தை நடத்தி வருகிறாா்கள்.

தேசிய பங்குச் சந்தையின் தணிக்கை பாதுகாப்பை ஐசெக் நிறுவனம் ஆய்வு செய்தபோது என்ன மாதிரியான தகவல்கள் கிடைத்தன என்பது குறித்து அமலாக்கத் துறை சஞ்சய் பாண்டேயிடம் கேள்வி எழுப்பியதாகத் தெரிகிறது.

இந்த முறைகேடு வழக்கில் தேசிய பங்குச் சந்தையின் (என்எஸ்இ) முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா, என்எஸ்இ குழும செயல் அதிகாரி ஆனந்த் சுப்ரமணியன் ஆகியோா் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். அவா்களிடம் இந்த வழக்கு தொடா்பாக அமலாக்கத் துறை வாக்குமூலம் பதிவு செய்துவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருஇந்தளூா் மகா மாரியம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா

பாரா துப்பாக்கி சுடுதல்: மோனாவுக்கு தங்கம்

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

SCROLL FOR NEXT