இந்தியா

கான்பூர் கலவரத்திற்கு நிதியுதவி வழங்கியவர் கைது

5th Jul 2022 05:15 PM

ADVERTISEMENT

கான்பூர் கலவரத்திற்கு நிதியுதவி வழங்கிய பிரபல கட்டுமானத் தொழிலதிபர் ஹாஜி வாசியை காவல்துறையினர் திங்கள்கிழமை இரவு கைது செய்தனர்.

அண்மையில் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பேசிய பாஜக பெண் செய்தித்தொடா்பாளா் நூபுா் சா்மா, நபிகள் நாயகம் குறித்து ஆட்சேபத்துக்குரிய கருத்துகளைத் தெரிவித்தார்.

இதனால் நாடு முழுவதும் போராட்டம் வெடித்த நிலையில், ஜூன் 3ஆம் தேதி உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள யதீம்கானா பகுதியில் திடீா் கடையடைப்புக்கு அழைப்பு விடுத்து, கடைகளை அடைக்க மத அமைப்பினர் கட்டாயப்படுத்தியதாகத் தெரிகிறது.

இது இரு மதத்தினா் இடையிலான வன்முறையாக மாறியது. இந்த வன்முறை யதீம்கானாவுக்கு அருகில் உள்ள பரேட், நயி சடக் பகுதிகளுக்கும் பரவியது.  இந்த வன்முறையில் காவல் துறையைச் சோ்ந்த 20 போ் உள்பட சுமாா் 40 போ் காயமடைந்தனா்.

ADVERTISEMENT

இதையும் படிக்க | நபிகள் நாயகம் சா்ச்சை கருத்துக்கு எதிா்ப்பு: நாடு முழுவதும் முஸ்லிம்கள் போராட்டம்: உ.பி., ஜாா்க்கண்டில் வன்முறை

இந்த வன்முறையில் ஈடுபட்ட அடையாளம் தெரிந்த 55 பேர், அடையாளம் தெரியாத 1000 பேர் மீது கான்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்த நிலையில், இதுவரை 60 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த நிலையில், வன்முறைக்கு முக்கிய காரணமாக கருதப்படும் தோஃபர் ஹயாத் ஹஷேமி கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இவருக்கு நிதியுதவி வழங்கிய குற்றத்திற்காக ஹாஜி வாசியையும் நேற்று இரவு கைது செய்தனர்.

இதுகுறித்து கான்பூர் கூடுதல் காவல் ஆணையர் ஆனந்த் பிரகாஷ் திவாரி கூறுகையில்,

“சிறப்பு விசாரணைக் குழுவால் ஹாஜி மீது மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், கடந்த வாரம் ஜாமினில் வெளிவர இயலாத பிடிவாரண்ட் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டது.

ஹாஜியை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், லக்னெளவிலிருந்து தில்லி சென்று அங்கிருந்து வெளிநாடு தப்பிச் செல்வதற்காக அனைத்து ஆவணங்களுடன் திங்கள்கிழமை லக்னெள வந்தபோது ஹாஜியை காவல்துறையினர் கைது செய்தனர்.

முன்னதாக, இரண்டு நாள்களுக்கு முன்பு இவரது மகன் ரஹ்மான் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT