இந்தியா

பாகிஸ்தானில் கனமழை: 6 பேர் பலி

5th Jul 2022 01:32 PM

ADVERTISEMENT

 

தென்மேற்கு பாகிஸ்தான் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக வீடுகளின் கூரைகள் இடிந்து விழுந்ததில் பெண்கள், குழந்தைகள் உள்பட 6 பேர் உயிரிழந்ததாக மாகாண பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது. 

அறிக்கையின் படி, தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தின் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் பலர் காணாமல் போயுள்ளனர். இதனால் இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. 

திங்கள்கிழமை தொடங்கிய மழையானது செவ்வாய்க் கிழமையும் தொடர்ந்து பெய்து வருவதால் பலுசிஸ்தானில் 12-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமாகியுள்ளன. 

ADVERTISEMENT

ஜூன் மாதத்திலிருந்து, பலுசிஸ்தான் உள்பட பாகிஸ்தான் முழுவதும் பெய்த மழையில் 38 பேர் உயிரிழந்தனர் மற்றும் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமாகியுள்ளது. 

மேலும், கடந்த வாரம் கனமழையால் பயணிகள் பேருந்து சாலையில் சறுக்கி ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்து 19 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT