இந்தியா

மோசமான வானிலை: அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்

PTI

புது தில்லி: மோசமான வானிலை காரணமாக, அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

பஹல்காமில் உள்ள நுன்வான் முகாமிலிருந்து பக்தர்கள் யாரும் அமர்நாத் குகைக் கோயிலை நோக்கிப் பயணிக்க அனுமதிக்கப்படவில்லை.

பஹல்காமில் உள்ள நுன்வான் மற்றும் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள பல்தால் முகாமிலிருந்து பக்தர்கள் அமர்நாத் குகை கோயிலுக்குப் புறப்பட்டுச் செல்வார்கள். அந்த வகையில், இதுவரை சுமார் 65 ஆயிரம் பக்தர்கள் அமர்நாத் குகைக் கோயிலில் பனிலிங்கத்தை தரிசித்துள்ளனர். இன்று 6,351 பக்தர்கள் அமர்நாத் கோயிலுக்கு புறப்படத் தயாராக உள்ளனர். வானிலை சீரடைந்ததும், இவர்கள் அமர்நாத் நோக்கி புறப்படுவார்கள்.

 அமர்நாத் பனிக்குகை நோக்கிய 43 நாட்கள் பயணம், காஷ்மீரில் உள்ள இருமுகாம்களில் இருந்து வியாழக்கிழமை (ஜூன் 30) தொடங்கி, ஆகஸ்ட் 11-ஆம் தேதி முடிவடைகிறது.

 அமர்நாத் யாத்திரைக்கு 3 லட்சத்திற்கும் மேலான பக்தர்கள் பதிவுசெய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பக்தர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, அவர்களுடைய பயணத்தைக் கண்காணிக்க, ரேடியோ அலைவரிசை அடையாளமுறையை நிகழாண்டு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. முகாம்கள் மற்றும் தங்குமிடங்களில் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கரோனா பெருந்தொற்று காரணமாக, கடந்த இரு ஆண்டுகளாக யாத்திரை நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

SCROLL FOR NEXT