இந்தியா

நேபாளத்திற்கு 75 ஆம்புலன்ஸ்களை பரிசளிக்கும் இந்தியா

DIN

இந்தியா-நேபாளம் இடையேயான உறவை வலுப்படுத்தும் விதமாக இந்தியா நேபாளத்திற்கு 75 ஆம்புலன்ஸ்கள் மற்றும் 17 பள்ளிப் பேருந்துகளை பரிசாக அளித்துள்ளது. 

இந்தியாவின் இந்த உதவியின் மூலம் நேபாளம் அதன் மருத்துவக் கட்டமைப்பு மற்றும் கல்வித் துறையில் சிறப்பாக செயல்பட முடியும். நேபாளத்திற்காக புதிதாக நியமிக்கப்பட்ட இந்தியத் தூதர் நவீன் ஸ்ரீவஸ்தவா இந்த வாகனங்களின் சாவிகளை நேபாள அரசின் கல்வித் துறை மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தேவேந்திர பௌடலிடம் ஒப்படைத்தார்.

இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைவதை குறிக்கும் விதமாக நேபாளத்திற்கு 75 ஆம்புலன்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளதாக இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது. ஆம்புலன்ஸ்கள் மற்றும் பள்ளிப் பேருந்துகளை இந்தியா நேபாளத்திற்கு வழங்கியுள்ளது இரு நாட்டின் உறவினை வலுப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது என இந்தியத் தூதர் நவீன் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.

இது குறித்து இந்தியத் தூதர் கூறியதாவது: “இந்தியா-நேபாளம் இடையேயான உறவை வலுப்படுத்தும் விதமாக நீண்ட காலமாக நேபாளத்திற்கு இந்தியா வழங்கி வரும் உதவிகளில் இந்த முயற்சியும் ஒன்றாகும். மருத்துவம் மற்றும் கல்வித் துறையில் நேபாளம் சிறந்து விளங்க இந்த முயற்சி உதவியாக இருக்கும்.” என்றார். 

கடந்த ஆண்டு கரோனா பேராபாத்துக் காலத்தின்போது இந்தியா சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்ட 39 ஆம்புலன்ஸ்களை  நேபாளத்திற்கு வழங்கியது. அதேபோல கடந்த 2020ஆம் ஆண்டு மகாத்மா காந்தியின் 151வது பிறந்த நாளில் 41 ஆம்புலன்ஸ்கள் மற்றும் 6 பள்ளிப் பேருந்துகளை இந்தியா நேபாளத்திற்கு பரிசாக அளித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கீழமாளிகை, குழுமூா் திரெளபதியம்மன் கோயில்களில் தீமிதி திருவிழா

பெரம்பலூா் அருகே சொத்துக்காக தந்தையைத் தாக்கிய மகன் கைது: சாா்பு- ஆய்வாளா் பணியிட மாற்றம்

2024-25 கல்வியாண்டில் 157 கல்லூரிகளில் புதிய பாட வகுப்புகள், கூடுதல் பிரிவுகள்! கருத்துரு கேட்கிறது பாரதிதாசன் பல்கலைக்கழகம்

சரக்கு வாகன ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை

ஊராட்சி மன்றத் தலைவரின் மகனுக்கு அரிவாள் வெட்டு காா் ஓட்டுநா் கைது

SCROLL FOR NEXT