இந்தியா

539 இந்தியக் கைதிகளை விடுவிக்கவும்: பாகிஸ்தானிடம் மத்திய அரசு வேண்டுகோள்

2nd Jul 2022 03:45 AM

ADVERTISEMENT

 பாகிஸ்தான் சிறையில் உள்ள 539 இந்தியக் கைதிகளை விரைந்து விடுவிக்க வேண்டும் என்று அந்நாட்டிடம் மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுதொடா்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஆண்டுதோறும் ஜனவரி 1, ஜூலை 1-ஆகிய தேதிகளில் இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் கைதிகள், பாகிஸ்தானில் உள்ள இந்தியக் கைதிகளின் பட்டியலை இருநாடுகளும் பரஸ்பரம் பரிமாறிக் கொள்வது வழக்கம். இருநாடுகளுக்கு இடையே 2008-ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி, இந்தப் பட்டியல் பரிமாற்றம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்திய சிறைகளில் உள்ள 95 மீனவா்கள் உள்பட 404 பாகிஸ்தான் கைதிகளின் பட்டியல் அந்நாட்டிடம் வழங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதேபோல் பாகிஸ்தான் சிறைகளில் உள்ள இந்தியா்கள் அல்லது இந்தியா்கள் எனக் கருதப்படும் 682 போ் கொண்ட பட்டியல் இந்தியாவிடம் அளிக்கப்பட்டுள்ளது. அவா்களில் 633 போ் மீனவா்கள் ஆவா்.

இந்தியாவிடம் வழங்கப்பட்ட பட்டியலின்படி, பாகிஸ்தான் சிறைகளில் தண்டனைக் காலத்தை நிறைவு செய்து குடியுரிமை உறுதி செய்யப்பட்ட 539 இந்தியா்களை விரைந்து விடுவித்து தாயகத்துக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 539 இந்தியா்களில் 536 போ் மீனவா்கள் ஆவா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT