இந்தியா

18 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று பாஜக செயற்குழு கூட்டம்: பிரதமர் மோடி கலந்துகொள்கிறார்

2nd Jul 2022 01:05 PM

ADVERTISEMENT

18 ஆண்டுகளுக்குப் பிறகு இரு நாள்கள் நடைபெறும் பாஜக செயற்குழு கூட்டம் இன்று ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளது. 

பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா இந்நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார். 

மேலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக ஆளும் மாநில முதல்வர்கள், பாஜக முக்கிய நிர்வாகிகள் இதில் கலந்துகொண்டுள்ளனர். பாஜக செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள பிரதமர் நரேந்திர மோடியும் இன்று ஹைதராபாத் வருகிறார். 

வருகிற 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து, கட்சி கொள்கைகளில் மாற்றங்கள் குறித்தும் தேர்தல் பணிகள் குறித்தும் இதில் ஆலோசிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது. 

ADVERTISEMENT

மேலும் பாஜகவில் சில முக்கிய முடிவுகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கலாம். 

மேலும் நாளைய தினம் தெலங்கனாவில் பாஜகவின் மாபெரும் பேரணி ஒன்றும் நடைபெற உள்ளதாக அக்கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் என்.வி.சுபாஷ் தெரிவித்துள்ளார். 

முன்னதாக நேற்று ஹைதராபாத்தில் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா தலைமையில் பேரணி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிக்க | சின்ஹவுக்கு வரவேற்பு; பிரதமர் மோடி புறக்கணிப்பு - 'கெத்து' காட்டும் சந்திரசேகர் ராவ்!

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT