இந்தியா

பாஜக தேசிய செயற்குழுவில் பங்கேற்க ஹைதராபாத் சென்றார் பிரதமர் மோடி

2nd Jul 2022 06:04 PM

ADVERTISEMENT

ஹைதராபாத்: பாரதீய ஜனதா கட்சியின் இரண்டு நாள் தேசிய செயற்குழுவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை ஹைதராபாத் வந்தடைந்தார்.

பிரதமர் மோடி, நகரில் உள்ள பேகம்பேட் விமான நிலையத்தில் தரையிறங்கிய பிறகு, ஹெலிகாப்டர் மூலம் கூட்டம் நடைபெறும் ஹைதராபாத் சர்வதேச செயற்குழுவுக்கு புறப்பட்டார்.

பிரதமர் மோடி, தனது சுட்டுரையில், கட்சியை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் பல்வேறு விஷயங்கள் குறித்து பாஜக தேசிய செயற்குழுவில் விவாதிப்போம் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: 18 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று பாஜக செயற்குழு கூட்டம்: பிரதமர் மோடி கலந்துகொள்கிறார்

ADVERTISEMENT

மேலும், தெலங்கனா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பிரதமரை வரவேற்றார். அவருக்கு தெலுங்கனா அரசு சார்பில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் டி.ஸ்ரீனிவாஸ் யாதவ் உற்சாக வரவேற்பு அளித்தார்.

இந்த செயற்குழுவில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள், 18 மாநில முதல்வர்கள், பாஜகவின் மாநிலத் தலைவர்கள் மற்றும் பிற தலைவர்கள் உட்பட சுமார் 350 பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.

இரண்டாம் நாள்(நாளை) தேசிய செயற்குழுவில் மோடி உரையாற்றுவார் என தெரிகிறது. தேசிய செயற்குழு முடிவடைந்த பின்னர், ஞாயிற்றுக்கிழமை மாலை செகந்திராபாத்தில் உள்ள பரேட் மைதானத்தில் கட்சி ஏற்பாடு செய்துள்ள பொதுக்கூட்டத்தில் அவர் மற்ற முக்கிய தலைவர்களுடன் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.

பொதுக்கூட்டம் முடிந்து ராஜ்பவனில் தங்கும் மோடி, திங்கள்கிழமை காலை ஆந்திர மாநிலம் பீமாவரம் செல்கிறார்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT