இந்தியா

மணிப்பூர் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 25-ஆக உயர்வு

2nd Jul 2022 01:00 PM

ADVERTISEMENT

 

மணிப்பூரில்  ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது.

மணிப்பூரின் நோனி மாவட்டம் தூபுலில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வந்தது. இந்த நிலையில், வியாழக்கிழமை தூபுல் ரயில் நிலையம் அருகே திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்த நிலச்சரிவில் சிக்கிய 18 பிராந்திய ராணுவ வீரர்கள் மற்றும் 6 பொதுமக்களின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

மணிப்பூரில் தொடர்ந்து மூன்றாவது நாளாகத் தேடுதல் பணி தொடர்வதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர். 

அப்பகுதியில் மழை எச்சரிக்கை இருப்பதால் உயிரிழப்புகள் உயர வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT