இந்தியா

'சிவசேனையிலிருந்து நீக்கப்பட்டதை ஷிண்டே சட்டப்பூர்வமாக எதிர்கொள்வார்'

2nd Jul 2022 04:39 PM

ADVERTISEMENT

 

சிவசேனையிலிருந்து மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை நீக்கிய முடிவை உத்தவ் தாக்கரே திரும்பப் பெற்றுக்கொள்ளாவிட்டால், அதனை ஷிண்டே சட்டப்பூர்வமாக எதிர்கொள்வார் என்று அதிருப்தி எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர முதல்வராகப் பதவியேற்றுள்ள ஏக்நாத் ஷிண்டேவை கட்சியில் இருந்து நீக்கி சிவசேனை கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டிருந்தார்.

இதையும் படிக்க.. உதய்பூர் தையல்காரரைக் கொன்றவர் பா.ஜ.க.வைச் சேர்ந்தவரா? வெளியான புகைப்படங்கள்!

ADVERTISEMENT

சிவசேனை கட்சியின் மூத்த அமைச்சராக இருந்த ஏக்நாத் ஷிண்டே, தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் அக்கட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய நிலையில், பாஜக ஆதரவுடன் நேற்றுமுன்தினம் மகாராஷ்டிர முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார். பாஜக மூத்தத் தலைவரான தேவேந்திர ஃபட்னவீஸ் துணை முதல்வராகப் பதவியேற்றுள்ளார். 

இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே, 'சிவசேனைக்கு துரோகம் செய்தவா்கள், இப்போது ஏக்நாத் ஷிண்டே சிவசேனையைச் சோ்ந்தவா் என்று பிரசாரம் செய்கின்றனா். அவரை சிவசேனை கட்சியின் முதல்வராக ஏற்றுக் கொள்ள முடியாது. சிவசேனையில் இருந்து சென்ற எம்எல்ஏக்கள் மக்கள் நம்பிக்கையுடன் அளித்த வாக்குகளை வீணாக்கியதுடன், ஜனநாயகத்தையும் கேலிக்கூத்தாக்கிவிட்டனா்’ என்றார். 

இதையடுத்து ஏக்நாத் ஷிண்டேவை சிவசேனை கட்சியில் இருந்து நீக்கி அவர் உத்தரவிட்டுள்ளார். கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக அவர் வெளியேற்றப்படுவதாக தாக்கரே குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், கோவாவிலிருந்து பேசிய சிவசேனை அதிருப்தி எம்எல்ஏ தீபக் கேசர்கார், தாக்கரே தனது முடிவை திரும்பப் பெற்றுக் கொள்ளாவிட்டால், சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT