இந்தியா

மணிப்பூரில் மேலும் ஒரு நிலச்சரிவு: அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 7 பேர் பலி

2nd Jul 2022 05:13 PM

ADVERTISEMENT

மணிப்பூரின் நோனி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 7 பேர் பலியானார்கள். 

மணிப்பூரின் நோனி மாவட்டத்தில் ரயில்வே கட்டுமானத் தளத்தில் இன்று திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் பாதுகாப்புப் படை வீரர் உள்பட அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 7 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் 12 தொழிலாளர்களை காணவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர். 

இதையும் படிக்க- ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய வாய்ப்பு!

மணிப்பூரின் நோனி மாவட்டம் தூபுலில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வந்தது. வியாழக்கிழமை தூபுல் ரயில் நிலையம் அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 25 பலியாகியுள்ளனர். தொடர்ந்து அங்கு 3ஆவது நாளாக இன்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

ADVERTISEMENT

இந்த நிலையில் நோனி மாவட்டத்தில் ஏற்கெனவே நிலச்சரிவு நடந்த இடத்திற்கு அருகில் மற்றொரு நிலச்சரிவு ஏற்பபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT