இந்தியா

கட்சியினருடன் உத்தவ் தாக்கரே சந்திப்பு

1st Jul 2022 04:18 PM

ADVERTISEMENT

 

 

முதல்வர் பதவியை ராஜிநாமா செய்த உத்தவ் தாக்கரே தன் கட்சியினரை சந்தித்து வருகிறார்.

மகாராஷ்டிரத்தில், பாஜக ஆதரவுடன் சிவசேனை அதிருப்தி எம்எல்ஏக்கள் குழுத் தலைவா் ஏக்நாத் ஷிண்டே (58) நேற்று இரவு முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டாா்.

ADVERTISEMENT

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான தேவேந்திர ஃபட்னவீஸ் முதல்வராகப் பதவியேற்பாா் என்று எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், அவா் துணை முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டாா்.

இதையும் படிக்க.. தங்கம் இறக்குமதி வரி உயர்வால் என்னவாகும்? விலை அதிகரிக்குமா?

மேலும், மகாராஷ்டிர சட்டப்பேரவையில் ஜூலை 4ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

இந்நிலையில், முதல்வர் பதவியை ராஜிநாமா செய்த உத்தவ் தாக்கரே மும்பையில் உள்ள  சிவசேனை பவனில் தன் கட்சியினரை சந்தித்து வருகிறார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT