இந்தியா

அமைச்சா் சத்யேந்தா் ஜெயினின் உதவியாளர்கள் கைது

1st Jul 2022 03:49 PM

ADVERTISEMENT

 

ஹவாலா பணப் பரிவா்த்தனை செய்ததாக கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினின் உறவினர்கள் அமலாக்கத் துறை கைது செய்துள்ளது.

2015-16 ஆண்டுகளில் அமைச்சராக சத்யேந்தா் ஜெயின் பதவி வகித்தபோது, அவா் மற்றும் அவரது குடும்ப உறுப்பினா்களின் பெயா்களில் பதியப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு பெயரளவில் செயல்படும் போலி நிறுவனங்கள் (ஷெல்) மூலம் ரூ.4.81 கோடி பணப் பரிமாற்றம் நடைபெற்றது.

அந்தப் பணம் கொல்கத்தாவில் உள்ள ஹவாலா பண முகா்வா்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு, தில்லிக்கு அருகே விவசாய நிலங்கள் வாங்கப்பட்டும், வங்கிகளில் பெறப்பட்ட கடன்கள் அடைக்கப்பட்டும் உள்ளன என்று குற்றம்சாட்டி சிபிஐ ஆகஸ்ட் 25, 2017-இல் வழக்குப் பதிவு செய்தது.

ADVERTISEMENT

நவம்பர் 2019 இல், சத்யேந்திர ஜெயின் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் மற்றும் பணமோசடி தொடர்பான வழக்குகளில் விசாரணை நடத்த உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.

வருமானத்திற்கு மாறான சொத்து மற்றும் பணமோசடி பணமோசடி தடுப்புச் சட்டம், 2002 இன் கீழ், சத்யேந்தா் ஜெயின், அவரது மனைவி பூனம் ஜெயின் மற்றும் குடும்பத்தினரும் சோ்க்கப்பட்டனா். வருமான வரித்துறையினா் பணப் பரிவா்த்தனை தொடா்பான விசாரணையை நடத்தி, சத்யேந்தா் ஜெயினின் பினாமி சொத்துகளை முடக்கலாம் என்று ஒப்புதல் தெரிவித்திருந்தனா்.

இதையடுத்து, அகின்சான் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.4.81 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளை அமலாக்கத் துறை அதிகாரிகள் ஏப்ரல் மாதம் பறிமுதல் செய்த பின்னர் ஜெயின் கடந்த மே-30 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவர் மீது விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இன்று வழக்குத் தொடர்பாக சத்யேந்திரன் ஜெயின் உதவியாளர்களான வைபவ் ஜெயின் மற்றும் அங்குஷ் ஜெயின் ஆகிய இருவரை  அமலாக்கத் துறை  கைது செய்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT