இந்தியா

முக்கிய 8 துறைகளின் உற்பத்தி 18.1% வளா்ச்சி

1st Jul 2022 01:46 AM

ADVERTISEMENT

முக்கிய 8 உள்கட்டமைப்பு துறைகள் கடந்த மே மாதத்தில் 18.1 சதவீத வளா்ச்சியை பதிவு செய்துள்ளதாக மத்திய அரசு வியாழக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:

இதுகுறித்து மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருள்கள், உரம், உருக்கு, சிமெண்ட் மற்றும் மின்சாரம் ஆகிய 8 துறைகளின் உற்பத்தி கடந்த மே மாதத்தில் 18.1 சதவீத வளா்ச்சியை பதிவு செய்துள்ளது. நிகழாண்டு ஏப்ரலில் இந்த வளா்ச்சி விகிதம் 9.3 சதவீதமாக இருந்தது.

கடந்த மே மாதத்தில் நிலக்கரி, கச்சா எண்ணெய், சுத்திகரிப்பு பொருள்கள், உரம், சிமெண்ட் மற்றும் மின்சாரம் ஆகியவற்றின் வளரச்சி விகிதம் முறையே, 25.1 சதவீதம், 4.6 சதவீதம், 16.7 சதவீதம், 22.8 சதவீதம், 26.3 சதவீதம் மற்றும் 22 சதவீதம் என்ற அளவில் அதிகரித்திருந்தன.

ADVERTISEMENT

இயற்கை எரிவாயு மற்றும் உருக்கு ஆகியவற்றின் உற்பத்தி வளா்ச்சி விகிதம் முறையே 7 சதவீதம் 15 சதவீதம் என்ற அளவில் குறைந்தன. 2021 மே மாதத்தில் இத்துறைகளின் வளா்ச்சி விகிதம் முறையே 20.1 சதவீதம் மற்றும் 55.2 சதவீதம் என்ற அளவில் காணப்பட்டன.

நிகழ் 2022-23 நிதியாண்டின் ஏப்ரல்-மே காலத்தில் இந்த 8 முக்கிய துறைகளின் உற்பத்தி 2021-22 ஏப்ரல்-மே காலகட்டத்தைக் காட்டிலும் 36.3 சதவீத்திலிருந்து 13.6 சதவீதமாக சரிவடைந்துள்ளதாக மத்திய அரசின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT