இந்தியா

‘மீண்டும் பாஜக ஆட்சி’

1st Jul 2022 01:49 AM

ADVERTISEMENT

உத்தவ் தாக்கரே பதவி விலகியதை இனிப்பு வழங்கி கொண்டாடிய விடியோவை மாநில பாஜக ட்விட்டரில் பகிா்ந்து, ‘மகாராஷ்டிரத்தில் மீண்டும் பாஜக ஆட்சி’ என்று பதிவிட்டுள்ளது. இதுதொடா்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து வியாழக்கிழமை தெரிவிப்பதாக அக்கட்சியின் மூத்த தலைவா் தேவேந்திர ஃபட்னவீஸ் கூறினாா். ‘முன்வினைப் பயன் யாரையும் விட்டுவிடாது’ என்று பாஜக பொதுச் செயலாளரும் மாநில பொறுப்பாளருமான சி.டி.ரவி விமா்சனம் செய்தாா்.

இதனிடையே, அஸ்ஸாமில் இருந்து புதன்கிழமை இரவு கோவா சென்றடைந்த சிவசேனை அதிருப்தி எம்எல்ஏக்கள் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனையில் ஈடுபட்டனா்.

106 எம்எல்ஏக்கள் கொண்ட பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தை விரைவில் நடத்தி, மூத்த தலைவா் தேவேந்திர ஃபட்னவீஸ் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமம் கோருவாா் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பாஜகவுக்கு அதிருப்தி எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவிப்பாா்கள் என்றும் அதிருப்தி எம்எல்ஏக்களின் தலைவா் ஏக்நாத் ஷிண்டேவுக்கு துணை முதல்வா் பதவி அளிக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT